Sunday, December 27, 2020

ஆய கலைகள் 64 ...!!! (64 Arts of Life)


ஆய கலைகள் 64 என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆய கலைகள் 64 பற்றி கம்பர் பாடியதாவது :-

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருபளிங்கு வாராது இடர்..

 எல்லா கலைகளுக்கும் அதிபதி என்று போற்றப்படுபவள் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி ஆவாள். தினமும் நாம் சரஸ்வதி தேவியை மனதில் வணங்கி விட்டு முழு மனதோடு நம் பணியை தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிட்டும். நம் குழந்தைகளை தினமும் காலை மற்றும் மாலை கடவுளைப்  பிராத்தனை செய்யுமாறு கட்டாயம் அறிவுறுத்த வேண்டும். அது அவர்கள் இடத்தில் நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்து படிப்பு மற்றும் இதர கலைகளில் முன்னேற உதவி புரியும். இது நம் முன்னோர்களின் தொன்று தொட்ட வழக்கமாக இருந்தது. இந்த நவீன யுகத்தில் மறைந்து கொண்டு இருக்கிறது. அதை நாம் தான் நம் தலைமுறையினருக்கு கற்று தர வேண்டும். இங்கு பண்டை தமிழர்கள் கற்று தேர்ந்த 64 கலைகள்  எவை என்பதை தெரிந்து கொள்வோம். இதோ...!!!

1. அக்ஷர விலக்கணம் - எழுத்துக் கூட்டும் பயிற்சி

2. இலிகிதம் - கையெழுத்துப் பயிற்சி

3. கணிதம் - எண் பயிற்சி

4. வேதம் - மறைநெறி

5. புராணம் - சமய நுட்பங்களின் விரிவு கடவுளின் வரலாறு

6. பியாகரணம் - இலக்கணம்

7. நீதி சாஸ்திரம் - நீதி அறிவுத் திறன்

8. ஜோதிட சாஸ்திரம் - ஜோதிட அறிவுத்திறன்

9. தரும சாஸ்திரம் - சட்ட அறிவுத் திறன்

10.யோக சாஸ்திரம் -யோக பயிற்சி

11.மந்திர சாஸ்திரம் - வேதத்தின் நடைமுறைப் பயிற்சி

12.சகுன சாஸ்திரம் - சகுனம் நிமித்தம் அறிதல்

13.சிற்ப சாஸ்திரம் - நிமித்தம் அறிதல்

14.வைத்திய சாஸ்திரம் - மருந்தும் நோயும் அறிதல்

15.உருவ சாஸ்திரம் - உருவத்தால் அறிதல்,சாமுத்திரிகாலட்சணம்

16.இதிகாசம் - சரித்திர அறிவு

17.காவியம் - கவிபுனையும் ஆற்றல்

18.அலங்காரம் - அலங்கரிக்கும் பயிற்சி

19.மதுர பாடணம் - மொழித் தேர்ச்சி

20.நாடகம் - நாடகப் பயிற்சி

21.நிருத்தம் - நடனப் பயிற்சி

22.சத்தப் பிரமம் - சத்தத்தைக் கேட்டு அறிதல்

23.வீணை - வீணைப்பயிற்சி

24.வேணு - புல்லாங்குழல்

25.மிருதங்கம் - மிருதங்க பயிற்சி

26.தாளம் - கால நிர்ணயப் பயிற்சி

27.அஸ்திர பரிட்சை - எறியும் பயிற்சி, பாணப் பயிற்சி

28.கனக பரிட்சை - தங்கத்தை சோதிக்கும் அறிவு

29.இதர பரிட்சை - தேர் ஓட்டும் பயிற்சி

30.கஜ பரிட்சை - யானை ஏற்றம்

31.அஸ்வ பரிட்சை - குதிரை ஏற்றம்

32.இரத்தின பரிட்சை - இரத்தினக் கல் சோதிக்கும் திறன்

33.பூமிப் பரிட்சை - மண்ணை சோதிக்கும் திறன்

34.சங்கராமவிலக்கணம் – படைகளை வழிநடத்தும் திறன்

35.மல்யுத்தம் - மல்யுத்தப் பயிற்சி

36.ஆகருடணம் - கவர்ச்சி கலை

37.உச்சாடாணம் - பேய்களை ஏவுதல்

38.வித்துவேடணம் - வித்தையின் மூலம் அதிர்ச்சி உண்டாதல்

39.மதன சாஸ்திரம் - காதல் கலை

40.மோகனம் - மயங்கச் செய்யும் கலை

41.வசீகரணம் - மற்றவரை வசீகரித்தல்

42.இரசவாதம் - ஒரு பொருளை இன்னொரு பொருளாக்குதல்

43.காந்தருவ வாதம் - குழு வைத்தியப் பயிற்சி

44.பைபீல வாதம் - மிருகம்,பறவை,ஊர்வனவற்றை வசீகரித்தல்

45.கவுத்துக வாதம் - துக்கமுள்ள மனதை தேற்றும் பயிற்சி

46.தாது வாதம் – தாதுப்பயிற்சி

47.காருடம் - விஷத்தை முறிக்கும் பயிற்சி

48.நட்டம் – நட்டத்தை அறியும் திறன்

49.முட்டி - கைரேகை சாஸ்திரம்

50.ஆகாயப் பிரவேசம் - ஆகாயத்தில் மறைதல்

51.ஆகாய கமனம் – ஆகாயத்தில் நடந்து செல்லல்

52.பரகாயப் பிரவேசம் - மறு உடம்பில் பிரவேசித்தல்

53.அதிரிசயம் - தாசூன மறைதல்

54.இந்திர ஜாலம் - அதிசயமானவற்றை வரவழைத்தல் 

55.மகேந்திர ஜாலம் - ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்

56.அக்னி ஸ்தம்பம் - நெருப்பில் நடத்தல்

56.அக்னி ஸ்தம்பம் - நெருப்பில் நடத்தல்

57.ஜல ஸ்தம்பம் - தண்ணீரில் நடத்தல்

58.வாயு ஸ்தம்பம் - காற்றில் நடத்தல்

60.வாக்கு ஸ்தம்பம் - வாய் பயிற்சி

61.சுக்கில ஸ்தம்பம் - இந்திரியக் கட்டு

62.கன்ன ஸ்தம்பம் - மறைந்தவற்றை காணுதல்

63.கடக ஸ்தம்பம் - யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்

64.அவஸ்தை பிரயோகம் - ஆத்மாவை இயக்குதல்

No comments:

Post a Comment