Sunday, December 27, 2020

ஆய கலைகள் 64 ...!!! (64 Arts of Life)


ஆய கலைகள் 64 என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆய கலைகள் 64 பற்றி கம்பர் பாடியதாவது :-

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருபளிங்கு வாராது இடர்..

 எல்லா கலைகளுக்கும் அதிபதி என்று போற்றப்படுபவள் கல்வி கடவுளான சரஸ்வதி தேவி ஆவாள். தினமும் நாம் சரஸ்வதி தேவியை மனதில் வணங்கி விட்டு முழு மனதோடு நம் பணியை தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிட்டும். நம் குழந்தைகளை தினமும் காலை மற்றும் மாலை கடவுளைப்  பிராத்தனை செய்யுமாறு கட்டாயம் அறிவுறுத்த வேண்டும். அது அவர்கள் இடத்தில் நேர்மறை எண்ணங்களை தோற்றுவித்து படிப்பு மற்றும் இதர கலைகளில் முன்னேற உதவி புரியும். இது நம் முன்னோர்களின் தொன்று தொட்ட வழக்கமாக இருந்தது. இந்த நவீன யுகத்தில் மறைந்து கொண்டு இருக்கிறது. அதை நாம் தான் நம் தலைமுறையினருக்கு கற்று தர வேண்டும். இங்கு பண்டை தமிழர்கள் கற்று தேர்ந்த 64 கலைகள்  எவை என்பதை தெரிந்து கொள்வோம். இதோ...!!!

1. அக்ஷர விலக்கணம் - எழுத்துக் கூட்டும் பயிற்சி

2. இலிகிதம் - கையெழுத்துப் பயிற்சி

3. கணிதம் - எண் பயிற்சி

4. வேதம் - மறைநெறி

5. புராணம் - சமய நுட்பங்களின் விரிவு கடவுளின் வரலாறு

6. பியாகரணம் - இலக்கணம்

7. நீதி சாஸ்திரம் - நீதி அறிவுத் திறன்

8. ஜோதிட சாஸ்திரம் - ஜோதிட அறிவுத்திறன்

9. தரும சாஸ்திரம் - சட்ட அறிவுத் திறன்

10.யோக சாஸ்திரம் -யோக பயிற்சி

11.மந்திர சாஸ்திரம் - வேதத்தின் நடைமுறைப் பயிற்சி

12.சகுன சாஸ்திரம் - சகுனம் நிமித்தம் அறிதல்

13.சிற்ப சாஸ்திரம் - நிமித்தம் அறிதல்

14.வைத்திய சாஸ்திரம் - மருந்தும் நோயும் அறிதல்

15.உருவ சாஸ்திரம் - உருவத்தால் அறிதல்,சாமுத்திரிகாலட்சணம்

16.இதிகாசம் - சரித்திர அறிவு

17.காவியம் - கவிபுனையும் ஆற்றல்

18.அலங்காரம் - அலங்கரிக்கும் பயிற்சி

19.மதுர பாடணம் - மொழித் தேர்ச்சி

20.நாடகம் - நாடகப் பயிற்சி

21.நிருத்தம் - நடனப் பயிற்சி

22.சத்தப் பிரமம் - சத்தத்தைக் கேட்டு அறிதல்

23.வீணை - வீணைப்பயிற்சி

24.வேணு - புல்லாங்குழல்

25.மிருதங்கம் - மிருதங்க பயிற்சி

26.தாளம் - கால நிர்ணயப் பயிற்சி

27.அஸ்திர பரிட்சை - எறியும் பயிற்சி, பாணப் பயிற்சி

28.கனக பரிட்சை - தங்கத்தை சோதிக்கும் அறிவு

29.இதர பரிட்சை - தேர் ஓட்டும் பயிற்சி

30.கஜ பரிட்சை - யானை ஏற்றம்

31.அஸ்வ பரிட்சை - குதிரை ஏற்றம்

32.இரத்தின பரிட்சை - இரத்தினக் கல் சோதிக்கும் திறன்

33.பூமிப் பரிட்சை - மண்ணை சோதிக்கும் திறன்

34.சங்கராமவிலக்கணம் – படைகளை வழிநடத்தும் திறன்

35.மல்யுத்தம் - மல்யுத்தப் பயிற்சி

36.ஆகருடணம் - கவர்ச்சி கலை

37.உச்சாடாணம் - பேய்களை ஏவுதல்

38.வித்துவேடணம் - வித்தையின் மூலம் அதிர்ச்சி உண்டாதல்

39.மதன சாஸ்திரம் - காதல் கலை

40.மோகனம் - மயங்கச் செய்யும் கலை

41.வசீகரணம் - மற்றவரை வசீகரித்தல்

42.இரசவாதம் - ஒரு பொருளை இன்னொரு பொருளாக்குதல்

43.காந்தருவ வாதம் - குழு வைத்தியப் பயிற்சி

44.பைபீல வாதம் - மிருகம்,பறவை,ஊர்வனவற்றை வசீகரித்தல்

45.கவுத்துக வாதம் - துக்கமுள்ள மனதை தேற்றும் பயிற்சி

46.தாது வாதம் – தாதுப்பயிற்சி

47.காருடம் - விஷத்தை முறிக்கும் பயிற்சி

48.நட்டம் – நட்டத்தை அறியும் திறன்

49.முட்டி - கைரேகை சாஸ்திரம்

50.ஆகாயப் பிரவேசம் - ஆகாயத்தில் மறைதல்

51.ஆகாய கமனம் – ஆகாயத்தில் நடந்து செல்லல்

52.பரகாயப் பிரவேசம் - மறு உடம்பில் பிரவேசித்தல்

53.அதிரிசயம் - தாசூன மறைதல்

54.இந்திர ஜாலம் - அதிசயமானவற்றை வரவழைத்தல் 

55.மகேந்திர ஜாலம் - ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்

56.அக்னி ஸ்தம்பம் - நெருப்பில் நடத்தல்

56.அக்னி ஸ்தம்பம் - நெருப்பில் நடத்தல்

57.ஜல ஸ்தம்பம் - தண்ணீரில் நடத்தல்

58.வாயு ஸ்தம்பம் - காற்றில் நடத்தல்

60.வாக்கு ஸ்தம்பம் - வாய் பயிற்சி

61.சுக்கில ஸ்தம்பம் - இந்திரியக் கட்டு

62.கன்ன ஸ்தம்பம் - மறைந்தவற்றை காணுதல்

63.கடக ஸ்தம்பம் - யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்

64.அவஸ்தை பிரயோகம் - ஆத்மாவை இயக்குதல்

Saturday, December 26, 2020

குழந்தை வளர்ப்பிற்கான சில குறிப்புகள்... (Parenting tips)

 

குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் ஒரு வித சந்தோஷம் ஏற்படும். அவர்களோடு ஒன்றாக இணைந்து உலவும் போது நம்முடைய கஷ்டம் எல்லாம் மறந்து விடும். நாமும் குழந்தையாகவே இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் கூட தோன்றும்.ஆனால் நாம் குழந்தை வளர்ப்பிற்கான சில குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் நம் செய்கைகளை அப்படியே பின்பற்றுவார்கள். அதனால் நாம் நல்லவற்றையே கற்பித்து மேன்மையான வழியில் குழந்தைகளை வளர்ப்போம். குழந்தை வளர்ப்பில் நாம் கவனம் கொள்ள வேண்டியே விஷயங்கள் சில... 

  • அதிகக் கண்டிப்பு,அதிக செல்லம் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
  • படிப்பில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க வேண்டும்.
  • அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
  • அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.
  • குழந்தைகள் புறப்படும் நேரத்தையும், வீடு திரும்பும் நேரத்தையும் கவனிக்க வேண்டும்.
  • பெரியவர்களிடம் மரியாதையுடன் நடக்கப் பழக்க வேண்டும்.
  • சிறியவர்களிடம் அன்புடன் நடக்கப் பழக்க வேண்டும்.
  • குழந்தைகளின் நட்பு வட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
  • அவர்களிடம் இறை உணர்வை உண்டாக்க வேண்டும்.
  • நமது சொந்த விருப்புகளையும், இலட்சியங்களையும் அவர்கள் மேல் திணித்தல் கூடாது.
  • பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
  • மற்றவர் முன் இழிவுபடுத்தக் கூடாது.
  • பணத்தின் அருமையை,அவசியத்தை உணர்த்த வேண்டும்.
  • குழந்தைகளை குறுக்கு விசாரணை செய்யவோ, சந்தேகப் படவோ கூடாது
  • அவர்கள் விருப்பப்படி நடக்க அனுமதிக்க வேண்டும்.அந்த வழி சரியானதா என்பதை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும்.

Thumbnail image : Photo by cottonbro from Pexels

Thank you 

மனிதம்... சிறக்க வழிகள் 18 (Being Humane)

 


மனிதநேயம் உள்ள வரை நாம் இந்த உலகில் அனைவரும் சந்தோசமாக வாழலாம். நம்மால் முடிந்த வரை அடுத்தவரிடம் அன்பையே வெளிப்படுத்துவோம். எல்லா ஜீவ ராசிகளிடமும் கருணை மனதோடு நடந்து கொள்வோம். நம்மால் இயன்ற வரை பிறருக்கு உதவி புரிவோம். மற்றவர் மேலே இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கை விட்டு அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்வோம். அந்த எண்ணம் கூட நம்மை சிறந்த மனிதனாக  மாற்றும். நல்லதே நினைத்து  நம் வாழ்வில் நல்லதே நடக்க வழி செய்வோம். எப்போதும் அன்பு,இரக்கம்,கருணை,உதவும் மனப்பான்மை  நிலைத்து இருக்க வேண்டும் இந்த உலகினிலே. மனிதம் சிறக்க நாம் கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்..

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய், தந்தையர்

மிகமிக நல்ல நாள் - இன்று

மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு

மிகவும் வேண்டியது - பணிவு

மிகவும் வேண்டாதது - வெறுப்பு

மிகப்பெரிய தேவை - நம்பிக்கை

மிகக்கொடிய நோய் - பேராசை

மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

நீக்க வேண்டியது - பொறாமை

நம்பக்கூடாதது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிகப்பேச்சு

செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

செய்யக் கூடியது - உதவி

விலக்க வேண்டியது - சோம்பல்

உயர்வுக்கு வழி - உழைப்பு

நழுவவிடக் கூடாதது - வாய்ப்பு

பிரியக்கூடாதது - நட்பு

மறக்கக் கூடாதது - நன்றி

Thumbnail Image - Photo by Min An from Pexels

Thank you..!!